ஹட்டன் - மல்லிகைப் பூ சந்தி பிரதான வீதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததையடுத்து, இன்று (23) காலை அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
அலுவலகப் பணியாளர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பல பயணிகள் வழைமைபோல் பயணிக்கும் காலை நேர நெரிசலின்போது, காலை 6:10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விழுந்த மரத்தினால் வீதியின் இரு மருங்கிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பல பயணிகள் நடுவழியில் தவிப்புக்குள்ளாகினர் மற்றும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி வாசிகள், தோட்டத் தொழிலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) பணியாளர்கள் மற்றும் ஹட்டன் பொலிஸாரின் அதிகாரிகள் இணைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த நடவடிக்கைக்குப் பின்னர், தடை முழுமையாக அகற்றப்பட்டு, அதன்பின்னர் வழமைபோல் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.


Post a Comment
Post a Comment