நேர்மை சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்வு



 


.சுகிர்தகுமார்     

நேர்மை கலாசாரம் கிளின் சிறிலங்கா எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தேசியா ரீதியில் இடம்பெற்ற தேசிய நேர்மை வார நிகழ்வுகளின் நேர்மை சத்தியப்பிரமாணம் ஏற்கும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் உதவிப்பிரதேச செயலாளர் மா.இராமக்குட்டி உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் நிருவாக உத்தியோகத்தர் சோபிதா சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் நேசராஜா கிராம நிருவாக அலுவலர் பரிமளவாணி சில்வெஸ்டர் சமுர்த்தி முகாமைத்து பணிப்பாளர் பரமானந்தம் உள்ளிட்ட கிளைத்தலைவர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டார்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டதுடன் அரச சேவையின் தரம் வினைத்திறன் வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற முன்மாதிரியான நிருவாக கட்டமைப்பு உருவாக்கும் பொருட்டு அரசினால் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு வெளியிடப்பட்டது.
தொடர்ந்து 'நேர்மை கலாசாரம் தூய்மையான இலங்கை' எனும் தொனிப்பொருளில்  தேசிய செயற்பாட்டிற்கு எனது முழுப்பங்களிப்பையும் வழங்குவேன் என உறுதி பூணும் சத்தியபிரமாணம் வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இறுதியாக மக்கள் நலனில் அக்கறையுடன் செயற்பட வேண்டியதன் அவசியம் அதற்காக நேர்மை குழு பிரதேச செயலகத்தில் உருவாக்குதல் தொடர்பாகவும் அரச அதிகாரிகள் இலஞ்சம் ஊழல் வீண்விரயம் அற்ற நேர்மையானவர்களாக அரச ஆணைகளுக்கு கட்டுப்பட்டு நடப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் பிரதேச செயலாளர் உரையாற்றினார்.