( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று புகழ்பெற்ற கதிர்காம கந்தன் ஆடிவேல் விழாவின் மிக முக்கியமான, முதன்மையான ஆன்மீக நிகழ்வாக பாரம்பரிய முறைப்படி இந்த கொடியேற்ற விழா இன்று 20.07.2026 திங்கள் காலை இடம்பெற்றது.
உண்மையில் தெய்வானை அம்மன் கோவிலில் ஏற்றப்படும் சேவல் கொடியே கதிர்காமக் கொடியேற்றமாகும்.
கதிர்காமத்தின் சைவ முறைப்படியான கொடியேற்றம் ஆடிவேல் உற்சவத்தின் ஆறாம் நாளில் தெய்வானை அம்மன் கோவில் முன்னால் உள்ள தேக்குக் கொடி மரத்தில் இடம் பெறுவது வழக்கம்.
தெய்வானை அம்மன் ஆலயத்திற்கான பிரத்யேக காவி நிற சேவல் கொடி திருவிழாவின் ஆறாம் நாளே ஏற்றப்படுவதுமா வழக்கம்.
இன்று காலை தெய்வானை அம்மன் ஆலய பீடாதிபதியால் சைவ முறைப்படி கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மங்கல வாத்தியங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது.
இந்த கொடியேற்றத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளும் கலந்து கொண்டார்.


Post a Comment
Post a Comment