தெவிநுவர ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த எசல ஊர்வலத்தின்போது காவடி ஆட்டம் இடம்பெறுவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர், மாத்தறை மாவட்ட செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
குறித்த பெரஹர தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வு தலைவர், தேசிய புலனாய்வு சேவை மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றினால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு மதிப்பீட்டு அறிக்கைகளின்படி, ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நடனக் கலைஞர்களுக்கும் இடையே முரண்பாடான சூழ்நிலை ஏற்படக்கூடும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, குறித்த தினத்தில் நடைபெறவிருந்த காவடி நடன அங்கத்தை நீக்குமாறு பொலிஸ் மா அதிபர், மாத்தறை மாவட்ட செயலாளருக்கு எழுத்து மூலம் கடுமையாகப் பரிந்துரைத்துள்ளார்.
இதன்படி, குறித்த ஊர்வலத்தின்போது காவடி ஆட்டம் நடத்தப்படுவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment