Employment of Women, Young Persons and Children (Amendment) Billv பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் தொடர்பான திருத்தச் சட்டமூலம் இன்று (20) பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்று முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை நடைபெற்றதைத் தொடர்ந்து, சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1956ஆம் ஆண்டின் பெண்கள், இளம் ஆட்கள் மற்றும் பிள்ளைகளை தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தின் கீழ் இடம்பெறும் குற்றங்களுக்கான அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து ஒரு இலட்சம் ரூபா வரை அதிகரிக்கும் வகையில் இந்தத் திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டது.
.jpg)

Post a Comment
Post a Comment