2026ஆம் ஆண்டு 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான விண்ணப்பங்களை இன்று (07) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீள் பரிசீலனை விண்ணப்பங்களை பாடசாலை அதிபர்கள், பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, பரீட்சைத் திணைக்களத்தின் https://onlineexams.gov.lk என்ற இணையத்தளத்தில் உள்ள SCHOOL LOGIN ஊடாக ஒன்லைன் முறையில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment