மாதம்பே பகுதியில் தீ விபத்து



 


மாதம்பே பகுதியில் இயங்கி வரும் தென்னை சார்ந்த உற்பத்தி நிறுவனமொன்றில் இன்று (06) மாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தீயை கட்டுப்படுத்த சிலாபம் நகர சபையின் தீயணைப்புப் பிரிவினரும் பிரதேச மக்களும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.


தீவிபத்துக்கான காரணம் மற்றும் சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.