சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் உள்ள பாலம் நிர்மாண பணிகளை மேற்கொள்ள நிபுணத்துவ குழுவினர்கள் கள ஆய்வு ...!
-------
( எம்.என்.எம்.அப்ராஸ் )
சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில் உள்ள பாலம் நிர்மாண பணிகளை மேற்கொள்ள
நிபுணத்துவ குழுவினர்கள்(gro teach) கள ஆய்வு செய்ய இன்று(19 )சனிக்கிழமை சாய்ந்தமருதுக்கு விஜயம் செய்தனர்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவருமான
ஏ.ஆதம்வாபா அவர்களின் முயற்சியின் பலனாக மிக நீண்ட காலமாக கவனிப்பாடற்ற நிலையில்
சாய்ந்தமருது வைத்தியசாலை வீதியில்
சுமார் 50 வருடத்துக்கு மேல் அமைக்கப்பட்ட இப் பாலம் புதிதாக நிர்மாண பணிகள் ஆரம்பிக்க உள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவருமான
ஏ.ஆதம்வாபா இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் ,
கடந்த காலங்களில் இந்த பகுதியில் அரசியல்வாதிகள் வந்து இந்த பாலத்தை கட்டித் தருவோம் என அரசியல் செய்து இடை நடுவில் கைவிட்டு சென்று விட்டனர் இன்று எமது அரசாங்கம் வந்து சுமார் 20 மாதங்கள் கடந்து செல்லும் நிலையில் இந்த பாலத்தினை செய்வதற்கான ஆரம்ப நிகழ்வில் சாய்ந்தமருது மண் பெருமை கொள்கிறது.
இன்று நிபுணத்துவ குழுவினர்கள் பாலத்தின் நிலை தொடர்பில் ஆராய சுமார் 07 வாரங்கள் இங்கு தங்கி இருந்து அதன் நிலை தொடர்பில் அறிக்கை தயாரிக்க உள்ளனர்.
பின்னர் பாலத்தினை விஸ்தரிப்பு செய்து நடை பாதையுடன் கூடிய வகையில் விரைவில் புதிய பாலம் நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புத் தலைவருமான
ஏ.ஆதம்வாபா இதன் போது மேலும் கருத்து தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா அவர்களின் முயற்சியின் பேரில் சுமார் 150 மில்லியன் நிதி பங்களிப்பில் பாலம் நிர்மாண பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்படத்தக்கது.
சாய்ந்தமருது பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த பாலமாக இது காணபடுகின்றது கடந்த காலங்களில் பல்வேறு அரசியல்வாதிகள் மேற்குறித்த பாலத்தினை அபிவிருத்தி செய்யப்படும் என வாக்குறுதிகள் பொது மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்தும் பால நிர்மாணபணிகள் இடம் பெறவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
இதன் போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான்,வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் இசட்.ஏ.எம் அஸ்மீர்,ஏனைய அதிகாரிகள்,பிரஜா சக்தி தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Post a Comment
Post a Comment