கடந்த 2007ம் ஆண்டு காலப்பகுதியில், ஏறாவூர் பகுதியில், ஹொட்டேல் ஒன்றின் உரிமையாளரின் வீட்டுக்கு அத்துமீறிச் சென்று அவரது மனைவியான நாகமுத்து பிரேமாவதி என்ற பெண் ஒருவருக்கு மரணம் விளைவித்த குற்றவாளியான பாலதாஸ் பாலன் அல்லது திலகர் என்பவருக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி T.J. பிரபாகரன் அவர்கள், மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளளார்.
குறித்த வழக்கு ஏலவே மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு அப்போதைய மேல் நீதிமனட்ற நீதிபதி சந்திரா விஸ்வலிங்கம் அவர்களால் மரணதண்டணை விதிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, குறித்த குற்றவாளி தனக்கு எதிராக விதிக்கப்பட்ட மரண தண்டணையை எதிர்த்து மேன் முறையீடும் செய்திருந்தார். மேன் முறையீட்டு நீதிமன்றானது இந்த வழக்கினை் விசாரணைகளை மீள ஆரம்பிக்குமாறு மேல் நீதிமன்றுக்கு கட்டளை விதிக்கப்பட்டிருந்தது
இந்த வழக்கின் மீள் விசாரணைகள் இடம்பெற்று, இன்றைய தினம் குறித்த குற்றவாளிக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற கௌரவ நீதிபதி அவர்களால், மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது


Post a Comment
Post a Comment