ஆலையடிவேம்பு நிருபர்
உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட 7 வீடுகள் இன்று திறந்து வைக்கப்பட்டன.
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள முக்கிய அபிவிருத்தித் திட்டமான 'சொந்தமாக இருக்க ஒரு இடம், அழகான ஒரு வாழ்க்கை' வேலைத்திட்டத்தின் கீழ், அரசாங்கத்தின் 5,000 வீடுகள் வழங்கும் திட்டத்திற்கு அமைவாக வீடுகள் கையளிக்கப்பட்டன.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊடாக 20 இலட்சம் ஒதுக்கீட்டின் மூலம் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.
பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் ஆலையடிவேம்பு மற்றும் திருக்கோவில் பிரதேச இணைப்பாளரும் பிரதேச சபை உறுப்பினருமான ஆர்.ரதீசன் பிரதேச சபை உறுப்பினர்கள் இராஜேந்திரன் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஹூசைன்டீன் மாவட்ட செயலக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து நிரந்தர வீடுகள் இன்றி வாழ்ந்து மக்களுக்கே இவ்வீடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
வீடுகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் அரச அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இதேநேரம் இத்திட்டத்தின் மூலம், ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் இன்னும் 19 வீடுகள் இன்றைய கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Post a Comment
Post a Comment