( வி.ரி. சகாதேவராஜா,)
கிழக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம், கல்முனை பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்த ‘கிழக்கின் கலைச்சங்கமம் – Eastern Art Fusion’ கலை விழா கடந்த (6) செவ்வாய்க்கிழமை இரவு சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் உள்ள கலாச்சார மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
முன்னொருபோதும் நடைபெறாத அளவில் ஐந்து நாட்கள் கொண்ட பல்வேறு கலை வடிவங்களை உள்ளடக்கியதான இந்த மாபெரும் கலைச்சங்கமம் எனும் பெருவிழா நடைபெறுகிறது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் திருமதி மேனகா புவிக்குமாரின் வழிகாட்டலில் சிரேஸ்ட கலாச்சார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக் தலைமையில் இப் பெருவிழா ஆரம்பமானது.
சாய்ந்தமருது பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் பளீல் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஓய்வுபெற்ற அதிபர்களான கே.சந்திரலிங்கம் வி.பிரபாகரன் உள்ளிட்ட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
முதல் நாளான செவ்வாய்க்கிழமை தமிழ், முஸ்லிம் பாரம்பரியக் கலைக் கலாசார நிகழ்வுகள், பரதநாட்டியம், காவடி, கும்மி, கோலாட்டம், பொம்மலாட்டம், கரகாட்டம், பக்தர் கலை, சீனடி உள்ளிட்ட தமிழர் முஸ்லீம்களின் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
மறுநாள் கதிரவன் இன்பராசா தலைமையில் பட்டிமன்றம் இடம்பெற்றது.
தொடர்ந்து ஐந்து நாட்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று இன்று சனிக்கிழமை நிறைவு பெறுகிறது.
இதேவேளை அக்கரைப்பற்றில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பித்த கிழக்கின் கலைச் சங்கமம் நிறைவுற்றமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment