காட்டு யானைகள்! சதோச களஞ்சியத்திற்குச் சேதம்



 


நூருல் ஹுதா உமர்


கல்முனை அலியார் வீதியில் இன்று (25) அதிகாலை சுமார் 2.30 மணியளவில் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளன.

இதன்போது, அப்பகுதியில் அமைந்துள்ள சதோச களஞ்சியத்தின் முன்பக்கக் கதவு சேதமாக்கப்பட்டதுடன், களஞ்சியத்திலிருந்த பொருட்களும் நாசமாக்கப்பட்டுள்ளன. அத்துடன், அருகாமையில் அமைந்திருந்த சுவரும் காட்டு யானைகளால் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் அதிகாலை வேளையில் காட்டு யானைகள் புகுந்து இவ்வாறு சேதங்களை ஏற்படுத்தியுள்ளமை அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

காட்டு யானைகள் மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.