ஆசிரியர் தினத்தில் ஆசிரியருக்கு ஏற்பட்ட சோகம்



 


மட்டக்களப்பு வலையிறவு மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியையொருவர் இன்று (06) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.


பாடசாலை முடிந்து மற்றுமொரு ஆசிரியரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபோது, திமிலைதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


மட்டக்களப்பு நோக்கி மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளை செலுத்திய ஆசிரியர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.


ஆசிரியர் தினமான இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


விபத்துக்குப் பின்னர் டிப்பர் வாகன சாரதி அங்கிருந்து விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


உயிரிழந்த ஆசிரியரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.