( எம். என். எம். அப்ராஸ்)
கல்முனை பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டதையடுத்து டெங்கு நுளம்பு பரவுவதை கட்டுப்படுத்தி சுற்று சூழலை சுத்தமாக வைத்திருக்கும் முகமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஷகிலா இஸ்ஸதீன் அவர்களின் நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன் வழிகாட்டலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியலத்தின் மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச். ரிஸ்பின் தலைமையில் கல்முனையில் விசேட டெங்கு சுகாதார பரிசோதனையை நேற்று (03) இடம்பெற்றது .
கல்முனை பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம். லபீர் பொது சுகாதார மேற் பார்வை பரிசோதகர்கள் ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள், டெங்கொழிப்பு செயலணியினர் ஆகியோர் இணைந்து வீடு வீடாகச் சென்று சுகாதார சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும் இதன் போது பராமரிப்பின்றிக் கிடக்கும் வெற்றுக்காணிகள், கிணறுகள் மற்றும் நீர்த்தாங்கிகள் உள்ளிட்ட டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களுக்கு கடுமையான சுகாதார எச்சரிக்கையுடன் மேலும் சிவப்பு நிற அறிவுறுத்தல் விடுக்கப் பட்டதுடன் விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.

Post a Comment
Post a Comment