அண்மைய தோல்வியை மறந்து இறுதிப்போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் என ஷாஹித் ஷா அப்ரிடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,கடந்த சில போட்டிகளாக டாப் ஆர்டர் துடுப்பாட்டக்காரர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழப்பது அணிக்குச் சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் உள்ள குறைகளைச் சரிசெய்ய அடுத்த 3 நாட்களும் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாகத் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த போட்டிகளின் வெற்றிகளில் இருந்து நேர்மறையான அம்சங்களை எடுத்துக்கொண்டு, இறுதிப்போட்டிக்குத் தயாராகி வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே அணியின் இலக்கு என்றும் அவர் கூறினார்.


Post a Comment
Post a Comment