ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளின் கீழ், கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான வீதிப் பகுதியை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தங்களை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த ஜூலை 27ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இடைமாற்றுக் கட்டமைப்புகள் உள்ளிட்ட கஹதுடுவ (கிலோமீற்றர் 1+820) முதல் கிலோமீற்றர் 24+000 வரையிலான வீதிப் பகுதியை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதற்காக தேசிய போட்டி விலைமனுக் கோரல் முறையின் கீழ் ஒப்பந்ததாரர்களிடமிருந்து விலைமனுக்கள் கோரப்பட்டு, அவை மதிப்பீடு செய்யப்பட்டன.
இதனையடுத்து, உயர் மட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய ஒப்பந்தங்களை வழங்குவதற்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய, 1A முதல் 1K வரையிலான 11 ஒப்பந்தப் பிரிவுகளுக்கான ஒப்பந்தங்கள் பல்வேறு உள்நாட்டு நிர்மாண நிறுவனங்களுக்கு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்களின் மொத்தப் பெறுமதி, பெறுமதி சேர் வரி (VAT) நீங்கலாக 251.37 பில்லியன் ரூபாவாகும்.


Post a Comment
Post a Comment