கிழக்கு கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவருக்கு கடற்படையினால் அவசர சிகிச்சை




 திருகோணமலைக்கு அப்பால் கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது நோய்வாய்ப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த இலங்கை ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்றின் மீனவரை இலங்கை கடற்படையினர் இன்று (06) கரைக்கு அழைத்து வந்து மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


2026 ஒக்டோபர் 29ஆம் திகதி குடாவெல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 'கிஷான் புத்தா' எனும் ஆழ்கடல் மீன்பிடிப் படகு திருகோணமலை பொல்டர் முனையிலிருந்து சுமார் 54 கடல் மைல் தொலைவில் கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அப்படகில் இருந்த மீனவர் ஒருவர் திடீரென கடலில் தவறி விழுந்து மீட்கப்பட்டுள்ளார். 


அதனைத் தொடர்ந்து குறித்த மீனவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவரை அவசர மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வருவதற்குத் உதவியை வழங்குமாறு அறிவித்தது. அதற்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.