தினச்சுடர் விழா கோலாகலம்



 


தினச்சுடர் விழா கோலாகலம்; 54 ஆளுமைகளுக்கு முபாரக் மௌலவி தலைமையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் கரங்களினால் தேசிய விருதுகள் வழங்கிக் கௌரவிப்பு!


நூருல் ஹுதா உமர்


ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற தினச்சுடர் தேசிய விழாவின் மூன்றாம் கட்ட தேசிய விருது வழங்கும் நிகழ்வு இன்று (21.11.2026) சனிக்கிழமை காலை மாளிகைக்காடு பாவா றோயல் வரவேற்பு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.


தினச்சுடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாநிதி முபாரக் அப்துல் மஜீத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலை, இலக்கியம், ஊடகம், சமூக சேவை, அறிவிப்பு, கவிதை, எழுத்துத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமது ஆற்றல்களையும் சமூகப் பங்களிப்புகளையும் வெளிப்படுத்தி வரும் 54 ஆளுமைகளுக்கு தேசிய விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.


நிகழ்வின் பிரதம அதிதியாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் பொதுச் செயலாளர் இர்பான் முஹிதீன், கவிஞர் ஜன்னத்துல் பாத்திமா, ஸ்ரீலங்கா பென் கிளப் தலைவி மசூறா சுஹுர்தீன், கலாபூஷணம் திருமதி ஜெயராணி கணேஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இதன்போது பக்க வடிவமைப்பு, அறிவிப்பு, இலக்கியம், ஊடகம், கவிதை, எழுத்துத்துறை, கண்டுபிடிப்பு, கலை, சமூக சேவை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விசேட விருதுகள் வழங்கப்பட்டன.


அந்த வகையில், ஏ.எச்.எம். ஹரீஸ், றம்ஸானா சமீல், ஆர். இஸ்மட், எம்.ஏ. முஹம்மட், ஷிபானா அஸீம், சாஹுல் ஜுஹைம், சூபிற்றுஜ்னுல் மஜீதியா, எம்.எம். முன்சிப், மாஜிதா தவ்ஃபீக், முஸ்தபா மகுஜூது, இபா லாபீர், சித்தி சபீனா, கவிமகள் ஜெயவதி, யூ.எல்.யூ. மஜினா, எம்.எஸ்.எம். ஸாகிர், ஜவாஹிரா ரிஸ்வி, எம்.ஐ. பாத்திமா ருஷ்தா, சேகு முஹம்மத் பெனாசிரா, ஏ.ஆர். அஹமட் நபாயிஸ், ரஸ்ஸாக் சேகு தாவுத், நஸ்லின் ரிப்கா அன்ஸார், கயிலாயப்பிள்ளை ருத்திரன், முருகையா செல்வகுமாரன், ஏ.எம். இன்சாப், எம்.ஐ.எம். முஸ்தபா, ஏ.எம். ஹஸ்புல்லா, செல்வி வினாயகமூர்த்தி, வீ. மைக்கல் கொலின் உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.


மேலும், கலந்தர் பாத்திமா றிசாமா, எஸ்.எச். மும்தாஜ் பேகம், எம்.எஸ்.எம். அப்துல் மலிக், மருதூர் ஜமால்தீன், நட்பிட்டிமுனை சிராஜ், அப்துல் வாஹித் முஹம்மத் பாக்கி, முபீதா அமீன், வசீலா அபூபக்கர், வீ.டி. தமீம், அப்னாஸ் வசீர், பத்தக்குட்டி மதிபாலசிங்கம், எம்.ஆர். அதீபா, பாத்திமா ருக்ஷானா, என்.எப். நுஸைபா, மின்மினி மின்ஹா, ச. ரகுதாஸ், அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம். சதீக், அஸ்வான் மௌலானா, சேகுலெப்பை பாயிஸா, என்.எம். அலிக்கான், சஞ்ஸீதா முஜீப் ரஹ்மான், றிஹானாஹ் முஹம்மட் காசிம், ஏ.ஆர். முஹம்மத் ஷஹீத் உள்ளிட்டோரும் தத்தமது துறைகளுக்கான விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.


இதேவேளை, தினச்சுடர் தேசிய விருதுகளின் கீழ் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான எம்.வை. அமீர் மற்றும் பாறூக் ஷிஹான் ஆகியோருக்கு சிறந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விருதுகளும், கவிஞர் எஸ். ஜனூஸுக்கு சிறந்த சமூக ஊடகச் செயற்பாட்டாளர் விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.


2004ஆம் ஆண்டு முதல் கலை, இலக்கியம், ஊடகம் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கி வரும் ஆளுமைகளை அடையாளம் கண்டு கௌரவிக்கும் நோக்கில் தினச்சுடர் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இம்முறை மூன்றாம் கட்டமாக நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 54 ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வு கலை, இலக்கியம், ஊடகம் மற்றும் சமூக சேவைத் துறைகளில் ஈடுபட்டு வரும் ஆளுமைகளின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதுடன், வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரின் திறமைகளுக்கும் ஊக்கமளிக்கும் நிகழ்வாக அமைந்தது. நிகழ்ச்சிகளை சிரேஷ்ட ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் நெறிப்படுத்தினார்.