மல்வத்தையில், இன்று




தில்சாத் பர்வீஸ்

 மல்வத்தையில் மோட்டார் சைக்கிள் லொறி மோதி விபத்து; இருவர் வைத்தியசாலையில் அனுமதி.!!


தில்சாத் பர்வீஸ்


அம்பாறை மாவட்டம், மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை சற்று முன்னர் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி மோதிய விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே இவ்விபத்தில் காயமடைந்த நிலையில், அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.