வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, சிரேஸ்ட வெளிநாட்டுச் சேவை அலுவலரான இவர் அமெரிக்காவுக்கான இலங்கையின் அடுத்த தூதுவராக நியமிக்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (23) பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன் மூலம் அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படும் முதலாவது பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அருணி ரணராஜா படைக்கவுள்ளார்.
சிரேஷ்ட இராஜதந்திரியான அவர், தற்போது வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இதற்கு முன்னர் நெதர்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார்.
அவர் புதிய பதவியைப் பொறுப்பேற்கும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இதேவேளை, கனடாவிற்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக ரோஹன அம்பகொல்ல நியமிக்கப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment