நூருல் ஹுதா உமர்
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சவளக்கடை கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள அரிசி ஆலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இன்று டெங்கு ஒழிப்பு பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்நடவடிக்கையின்போது, அரிசி ஆலையின் வளாகம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் விரிவாகப் பரிசோதிக்கப்பட்டன.
இதன்போது, அரிசி ஆலையின் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டப்பட்டன.
மேலும், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு, அரிசி ஆலை உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன் அவ்விடங்கள் உடனடியாகச் சுத்தம் செய்யப்பட்டன.
இப்பரிசோதனை நடவடிக்கையில் மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் மற்றும் பொது சுகாதாரப் பரிசோதகர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரச சுகாதாரத் துறையினரின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்களும் ஒத்துழைப்பு வழங்கி, தமது சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பேணுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment