2015 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு இன்று முதல் தேர்தல்கள் செயலகத்தின் இணையத்தளத்தில் பிரசுரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வாக்காளர் இடாப்பு இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர். எம். ஏ. எல் ரத்னாயக்க தெரிவித்தார்.
இந்த காலப்பகுதியில் வாக்காளர் இடாப்பில் உள்ள பெயரில் குறைப்பாடுகள் காணப்படுமாயின் , மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளருக்கு அல்லது தேர்தல்கள் செயலகத்திற்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
WWW.ELECTION.LK எனும் இணையத்தள முகவரியூடாக 2015 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.

