2015 ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐ.சி.சி இன் விருது மற்றும் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருது ஆகியவற்றை அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் பெற்றுக்கொண்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி இன் கிரிக்கெட் விருதுகளுக்கான விபரம் சற்று முன்னர் வெளியிடப்பட்டது.
தென்னாபிரிக்க அணியின் டி வில்லியர்ஸ் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
அத்துடன் சிறந்த டி20 ஆட்டத்திற்கான விருது டு பிளசிஸிற்கு வழங்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியுடனான போட்டியில் 56 பந்துகளில் 119 ஓட்டங்களைப் பெற்றமைக்காகவே இந்த விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆண்டின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருது ஹசில் வூட்டிற்கு வழங்கப்பட்டதுடன் சிறந்த ஒருநாள் வீராங்கனைக்கான விருது மக லனிங்கிற்கு வழங்கப்பட்டது.
சிறப்பு விருதாக வழங்கப்படும் சிறந்த விழுமியமிக்க வீரருக்கான விருது பிரண்டன் மக்கலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

