குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவேன்- அமைச்சர் றிசாத்




தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்தால் அரசியலில் இருந்து விலகுவதாக அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.

பொது மேடைகளிலும் ஊடகங்களிலும் தன்னை இழிவுபடுத்தும் விடயங்கள், தனது புகழை கறைபடியச் செய்யும் விடயங்கள் அரசியல் நோக்கங்களிற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என, அவர் குற்றம்சாட்டியுள்ளார்.



கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதேவேளை, தேசிய பிக்குகள் சம்மேளத்தின் செயலாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் வௌியிட்டதாக கூறப்படும் கருத்துக் குறித்தும் இதன்போது அவர் அதிருப்தி வௌியிட்டார்.

வில்பத்து காட்டுக்குள் போதைப் பொருள் விற்பதாகவும் அங்கு காடுகளை அழித்து மீள்குடியேற்றம் செய்வதாகவும் ஆனந்த தேரர் கூறியுள்ளதாக இதன்போது குறிப்பிட்ட ரிஷாட், தேரரை தன்னுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறும் தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறும் சாவால் விடுத்துள்ளார்.

இதேவேளை, அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் இந்த சவாலை ஏற்றுக் கொள்வதாக பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.