.
-ஹுஸைன்-
-ஹுஸைன்-
கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் மட்டக்களப்பு, வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 330 பேருக்கு சுமார் 1600 ரூபாய் பெறுமதியுள்ள கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு வாகரை மகா வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மாணவர்களின் கல்விச் செயற்பாட்டினை மேம்படுத்தும் முகமாக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராஜசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் உள்ள வறுமைக்குட்பட்ட மூவின விவசாய மற்றும் மீனவர் சமுதாய மாணவர்களின் கல்விக்கு உதவும் பொருட்டு இத்திட்டம் அமுல்படுத்தப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மார்க்கண்டு நடராசா, வாகரை பிரதேச செயலாளர் எஸ்.ஆர். ராகுல நாயகி, கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் ஸ்ரீகிருஸ்ணராஜா, விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் ஆர். கோகுலதாசன் வாகரைப் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
