(க.கிஷாந்தன்)
வரக்காபொல தும்பல்தெனிய சந்திக்கு அருகில் 30.12.2015 அன்று அதிகாலை 4.30 மணியளவில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதுடன் வரக்காபொல மற்றும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரக்காப்பொல
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை வேன் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்மாந்துறையினைச் சேர்ந்த குடும்பத்தவர் வீசா எடுக்கச் சென்ற சமயம் இவ் அனர்தம் நிகழ்ந்ததாக அறிவிக்கப்படுகின்றது.
மூன்று பெண்கள் மற்றும் ஒரு சிறு குழந்தை உட்பட சாரதி ஆகிய ஐவர் இந்த விபத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

