விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும், படையினருக்கும் பாதுகாப்பு வேண்டி ஆசீர்வாத பூஜை வழிபாடும், கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கையும் இன்று மாலை கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வுகள் அனைத்தும் கலகொட அத்தே ஞானசார தேரரின் தாயாரின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

