பட்டா வாகனம் புரண்டது.கல்முனைவாசிகள் உயிர் தப்பினா்




பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்று ஊடாக கல்முனைக்கு இறால் ஏற்றிச் சென்ற லொறி குடைசாய்ந்தது. இச் சம்பவம் ஒலுவில் களியோடைப் பாலத்தினை தாண்டி அட்டப்பளம் துவங்கும் இடத்தில் இன்று அதிகாலை 4 மணியவில் இடம் பெற்றதாக  சம்பவ இடத்தில் உள்ள பொலிசார் தெரிவிக்கின்றனர். சாரதியும் உதவியாளரும் இறைவன் துணைகொண்டு  சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக சம்பவ இடத்தகவல் தெரிவிக்கின்றது.