இஸ்லாமிய அரசு குழுவால் ஈர்க்கப்பட்ட ஒரு சிறுவன் கங்காரு மிருகத்தில் குண்டை கட்டி போலிஸாரை தாக்குவது எப்படி என்று கலந்துரையாடியதாக ஆஸ்திரேலியாவில் உள்ள வழக்குத் தொடுனர்கள் கூறியுள்ளனர்.
'கங்காருவில் குண்டை கட்டி போலிஸை தாக்க திட்டமிட்ட சிறுவன்.
மெல்பேர்னில் நடந்த வழக்குக்கு முன்னதான விசாரணை ஒன்றில், செவ்டெட் ரமதான் பெசிம் இவ்வாறு செய்ததாக நீதிமன்றத்துக்கு கூறப்பட்டது. தன்மீது சுமத்தப்பட்ட பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் நான்கை அவர் மறுத்திருந்தார்.மோதல்களில் கொல்லப்பட்ட ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து படையினரை நினைவுகூரும் அன்ஷாக் தினத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மெல்பேர்னில் ஒரு பொலிஸ்காரரை காரால் மோதி, கழுத்தை வெட்டி கொலை செய்ய திட்டமிட்டதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

