இந்திய - இலங்கை பொருளாதார ஒப்பந்தத்தால் பாதகமே ஏற்படும்!




இந்திய - இலங்கை பொருளாதார ஒப்பந்தத்தால் பாதகமே ஏற்படும்!
இந்திய - இலங்கை பொருளாதார ஒப்பந்தத்தில் கையெழுத்திட தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த ஒரு மக்கள் ஆணையும் கிடைக்கப் பெறவில்லை என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த ஒப்பந்தத்தால் இலங்கைக்கு பாதகமான நிலையே ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்த ஒப்பந்தத்தை கைச்சாத்திட நடவடிக்கை எடுப்பின் அதற்கு எதிராக செயற்படப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.