(க.கிஷாந்தன்)
ஹட்டன் அருள் மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் தைப்பூசத் தேர் திருவிழா 24.01.2016 அன்று பிரதம குருக்கள் பிரம்மஸ்ரீ பூர்ணசந்திரானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
24.01.2016 அன்று தைப்பூசத்தினத்தன்று காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூஜையை தொடர்ந்து ஸ்ரீ சண்முகநாதப் பெருமான் ஸ்ரீ வள்ளி தேவயானை சமேதராக மங்கள வாத்தியங்கள் முழங்க கரகம், காவடி சகிதம் கோவிலிலிருந்து புறப்பட்டு அட்டன் மல்லிகைப் பூ சந்தி வரை சென்று திரும்பி சைட் வீதி வழியாக மணிக்கூண்டு சந்தி வரை சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.
23.01.2016 அன்று காலை முதல் விசேட பூஜையும் வழிபாடும், அதனை தொடர்ந்து அட்டன் வில்பரட் நகர் ஸ்ரீ அம்மன் ஆலயத்திலிருந்து புனித தீர்த்தம், பால்குட பவனி பாலபிஷேகம் இடம்பெற்றதோடு தொடர்ந்து சுவாமி உள் வீதி வலம் வந்தமை குறிப்பிடதக்கது.
இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டனர்.

