
பிரித்தானியாவில் அடைக்கலம் கோருவோருக்கான சட்டத்தரணியின் கடிதங்கள் பெரும்பாலானவை போலி! பிரித்தானிய உயர்ஸ்தானிகரம்
பிரித்தானியாவில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ள இலங்கையர்களை உறுதிப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்படும் சட்டத்தரணிகளின் கடிதங்கள் பெரும்பாலும் நம்பிக்கையற்றவையாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவர் பிரித்தானிய உள்துறை அமைச்சுக்கு இந்த விடயத்தை கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
அரசியல் அடைக்கலம் கோரியவர்களுடைய 80 கோரிக்கைகளை பரிசீலித்தபோது அதில் 30 கோரிக்கைகளின் சட்டத்தரணி கடிதங்கள் நம்பிக்கைக்குரியனவாக இருக்கவில்லை.
குறிப்பாக குறித்த சட்டத்தரணி கடிதங்களில் தகமைகள் மற்றும் அங்கத்தவர் ஆவணங்கள் முறையாக இருக்கவில்லை என்று கொழும்பின் உயர்ஸ்தானிகரம் அறிவித்துள்ளது.
சில சட்டத்தரணிகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் கைது உத்தரவு உள்ளவர்களுக்கும் கடிதங்களை வழங்கியுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் உயர்ஸ்தானிகரக அலுவலர் குறிப்பிட்டுள்ளார்.
