மகிந்தவுடன் நெருக்கமான தாய்லாந்தின் மாபியா குழு இலங்கை விஜயம்




முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வந்த தாய்லாந்து மாபீயா கும்பல் தலைவர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அரச புலனாய்வுப் பிரிவினர் இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

தாய்லாந்து மாபீயா கும்பல் தலைவரும் அவரது சகாக்களும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவினர்  அறிவித்துள்ளனர்.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சின்வத்ராவுடன் தொடர்புடைய இந்த மாபீபா கும்பல், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுடனும் நெருங்கிய தொடர்பு பேணியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாய் மாபீயா கும்பல் உலகின் முன்னணி மாபீயா கும்பல்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.கடந்த அரசாங்கம் தாய் மாபீயா கும்பல் உறுப்பினர்கள் சிலருக்கு அடைக்கலம் வழங்கியிருந்தது என தெரிவிக்கப்படுகிறது.

தாய் மாபீயா கும்பலின் இலங்கை வருகை தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தக்சின் சின்வத்ரா மகிந்தவின் உத்தியோகப் பற்றற்ற ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.