பொலிஸில் திங்கள் சரணடைவேன்- மாகல்கந்தே சுதந்த தேரர்



ஹோமாகம சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவித்து, பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த தேரர்களில் ஒருவரான மாகல்கந்தே சுதந்த தேரர் எதிர்வரும் திங்கள் பொலிஸில் சரணடைவதாக அறிவித்துள்ளார்.
சமய சடங்கொன்றின் விடயமாக கடந்த சில நாட்களாக கொழும்புக்கு வெளியில் காணப்படுவதாகவும் தேரர் கூறியுள்ளார்.
ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு தனது கவலையை தெரிவித்துக் கொள்வதாகவும் மாகல்கந்தே சுதந்த தேரர் சிங்கள ஊடகமொன்றுக்கு சற்று முன்னர் குறிப்பிட்டுள்ளார்.