தலையில் துப்பாக்கி வைத்தாலும் தீர்ப்பு மாறாது- ஞானசார வழக்கு நீதிபதி



“எனது தலைக்கு துப்பாக்கியை வைத்தாலும் நான் ஞானசார தேரர் விடயத்தில் வழங்கிய உத்தரவை மாற்ற மாட்டேன்” என ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதிபதி ரங்க திஸாநாயக்க இன்று அறிவித்துள்ளார்.
பொதுபல சேனா செயலாளர் ஞானசார தேரருக்கு பிணை வேண்டி மனு தாக்கல் செய்த போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
“ எனது தவறு இருந்தால் எனக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளிடம் தெரிவியுங்கள். இந்த வழக்கு விசாரணையை என்னால் செய்திருக்கக் கூடாது என நான் நினைக்கின்றேன். நான் சட்டமா அதிபரின் ஆலோசனையையும் எதிர்பார்த்துள்ளேன். அடுத்த கட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படு முன் அந்த ஆலோசனை கிடைக்கும் என நான் எதிர்பார்க்கின்றேன்” எனவும் நீதிபதி மேலும் கூறியுள்ளார்.