தாய்லாந்து நாட்டு இளவரசி, அண்டைநாடான கம்போடியாவுக்குச் செல்லும்போது அங்கு பயன்படுத்த, அவருக்கென்று பிரத்யேகமாக கட்டப்பட்டகழிப்பறைக்கான செலவு என்ன தெரியுமா ? 40,000 டாலர்களாம்!
கம்போடியாவுக்கு, தாய்லாந்து இளவரசி, மஹா சக்ரி சிரிண்ட்ஹார்ன் , மூன்று நாட்கள் விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார்.
அப்போது அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக, ஏரியொன்றின் அருகே இதற்காகவே கட்டப்பட்ட குளிர்சாதனவசதி செய்யப்பட்ட கட்டிடம் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தைக் கட்ட யார் பணம் தந்தார்கள் என்பது தெளிவாகவில்லை.
ஆனால் இந்த இளவரசி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும்போது, இந்த கழிப்பறை அகற்றப்பட்டு, இந்த கட்டிடம் ஒரு அலுவலகமாக இயங்கும் என்று தெரிகிறது.
கம்போடியாவில் ஆறு மிலியன் பேருக்கும் மேல் சுத்தமான தண்ணீரோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளோ இல்லாத நிலையில் இருக்கிறார்கள் என்று ஐநா மன்றம் கூறுகிறது.

