
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை கிராமத்தில், மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்த கணவனை, குற்றவாளியாக இனங்கண்ட கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்தின மாரசிங்க, அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2010.04.27ம் திகதி மனைவியை தீ மூட்டி கொலை செய்ததாக இவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
பின்னர் இவருக்கு எதிராக கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து இவ் வழக்கு மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில் நேற்று திங்கட்கிழமை (08) குற்றவாளியாக இனங்காணப்பட்ட குறித்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
