19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் உலகக்கிண்ண அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.
இந்தியாவுக்கு எதிராக இந்த போட்டி இடம்பெற்றது.
நாணயச்சுழற்சியில் வென்ற இலங்கை அணி இந்திய அணியை முதலில் ஆட அழைத்தது.
அதன்படி 9 விக்கட்டுக்களை இழந்து இந்திய அணி 267 ஓட்டங்களை பெற்றது. முதலாவது இனிங்சில் இந்திய அணியின் அன்மொல்பிரீத் சிங் 72 ஓட்டங்களையும் இலங்கை அணியின் அசித பெனாண்டோ 4 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 19 வயதினர் 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 170 ஓட்டங்களையே பெற்றுகொண்டனர்.
அந்த வகையில் இந்திய அணி 97 ஓட்டங்களால் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவானதோடு, இலங்கை அணி இத்தொடரிலிருந்து விடைபெற்றது.

