மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வெளிநாட்டு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார்.
பொது மக்களின் முயற்சிகளை சூரையாடி இலாபம் தேடுவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களுக்கு அனுப்பும் முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
சவுதி அரேபியா, கட்டார், குவைட், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்தான் உட்பட மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது பல்வேறு காரணங்களினால் உயிரிழந்த இலங்கையர்கள் 34 பேரின் உறவினர்களுக்கு 5 கோடி 70 லட்சம் ரூபா நிதியை வழங்கி வைக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்

