சட்டச் சிக்கலில் சிக்கியுள்ளது ஸ்டார் வார்ஸ் (Star Wars)



தி ஃபோர்ஸ் அவேகின்ஸ் தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை எதிர் கொள்ள உள்ளது.
தி ஃபோர்ஸ் அவேகின்ஸ் தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை எதிர் கொள்ள உள்ளது
சமீபத்திய ஸ்டார் வார்ஸ் திரைப்படமான 'தி ஃபோர்ஸ் அவேகன்ஸ்' படத்தை தயாரித்த நிறுவனம், வழக்கு ஒன்றை எதிர் கொள்ள உள்ளது.
பிரிட்டனில் நடைபெற்ற அந்த படப்பிடிப்பின் போது, படத்தின் ஹான்ஸ் சோலோ கதாபாத்திரத்தில் நடித்த ஹரிசன் ஃபோர்ட், நீர்ச்சக்தியால் இயங்கும் (ஹைட்ரோலிக்) கதவு ஒன்று மோதி, விபத்துக்குள்ளாகியதில் அவரது கால் ஒன்று முறிவடைந்துள்ளது.
படத்திற்காக உருவாக்கப்பட்ட மிலேனியம் ஃபால்கன் விண்ஓடத்தின் கதவு மோதியதாலே அவரது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு சட்டத்தை மீறியதாக நான்கு குற்றச்சாட்டுக்கள் டிஸ்னி தயாரிப்பு நிறுவனத்தின் ஒரு பகுதியான ஃபூட்ல்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மே மாதத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
ஹாரிசன் ஃபோர்ட் முழுமையாக குணமடைந்துள்ளார்.