இலங்கைக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் கைச்சாத்திடவுள்ள “இட்கா” உடன்படிக்கைக்கு எதிராக தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் என்பன இணைந்து பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்பொழுது இணைந்துள்ள பொறியியலாளர்கள், வைத்தியர்கள் மற்றும் தொழில்நுட்ப வியலாளர்கள் ஆகியோரின் தொழிற்சங்கங்கள் தவிர ஏனைய தொழிற்சங்கங்கள் பலவற்றுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக கூட்டு பொறியியலாளர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் உபாலி ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதனால், தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைப் போன்றே நாட்டுக்கும் பாதிப்பானது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
எதிர்வரும் மே மாதத்துக்கு முன்னர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

