இந்திய இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நேற்று இடம்பெற்ற முதலாவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றது.
இலங்கை – இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று இரவு இடம்பெற்றது. இலங்கை அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் கசுன் ரஜித்த, விக்கெட் காப்பாளர் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் அறிமுகம் ஆனார்கள்.
ஆடுகளத்தில் புற்கள் அதிகமாக காணப்பட்டதால், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமளிக்கும் என்று கருதிய இலங்கை அணித்தலைவர் சந்திமால் நாணயச்சுழற்சியில் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அவரது கணிப்பு சிறிதும் பொய்க்கவில்லை.
ஷிகர் தவானும், ரோகித் ஷர்மாவும் இந்தியாவின் இனிங்ஸை ஆரம்பித்தனர். அறிமுக வீரரான கசுன் ரஜித்த வீசிய 2 ஆவது பந்திலேயே ரோகித் சர்மா (0) நேராக அடித்த பந்தை சமீர அபாரமாகப் பிடியெடுத்தார். அடுத்து வந்த ரஹானேவும் (4 ஓட்டங்கள்) அதே ஓவரில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்திலேயே தடம் புரண்ட இந்திய அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை.
ஆடுகளத்தில் பந்து சீறிப்பாய்ந்ததுடன், நன்கு பவுன்சும் ஆனது. அது மட்டுமின்றி இலங்கை பந்துவீச்சாளர்கள் ஸ்டம்பை குறி வைத்து துல்லியமாக பந்து வீசி மிரட்டினர்.
ஷிகர் தவான் 9 ஓட்டங்களிலும், தலைவர் தோனி 2 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதற்கிடையே, சிறிது நேரம் தாக்குப்பிடித்த சுரேஷ் ரெய்னா 20 ஓட்டங்களிலும் (ஒரு நான்கு ஓட்டம், ஒரு சிக்சர்) கிளீன் போல்ட் ஆனார். யுவராஜ் சிங், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜாவும் நிலைக்கவில்லை.
72 ஓட்டங்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நிலையில் அஸ்வினின் 31 ஓட்டங்களால் இந்திய அணி சற்று கௌரவமான ஓட்டப் பெறுதியை பெற்றுக்கொண்டது. எனினும் 101 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் 3 ஆவது மோசமான ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். ஏற்கனவே
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 74 ஓட்டங்கள் தென்ஆபிரிக்காவுக்கு எதிராக 92 ஓட்டங்கள் இந்திய அணியால் பெறப்பட்டிருந்தன.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 74 ஓட்டங்கள் தென்ஆபிரிக்காவுக்கு எதிராக 92 ஓட்டங்கள் இந்திய அணியால் பெறப்பட்டிருந்தன.
இலங்கை தரப்பில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ரஜித்த, தசுன் சானக தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
எளிதான இலக்கு என்பதால் இலங்கை அணி பதற்றமின்றி விளையாடியது. சந்திமால் (35 ஓட்டங்கள்), கப்புகெதர (25 ஓட்டங்கள்), சிறிவர்த்தன (21 ஓட்டங்கள்) ஆகியோரின் கணிசமான பங்களிப்பின் உதவியுடன் இலங்கை அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 105 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் நாயகனாக அறிமுக வீரர் ரஜித்த தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2 ஆவது போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி ராஞ்சியில் நடக்கிறது.
மேலும் டி20 வரலாற்றில் தாம் வீசிய முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதல் இலங்கை வீரர்கள் எனும் பெருமையை டசுன் சானக்க மற்றும் ரஜித்த பெற்றுக்கொண்டனர்.
இந்த வெற்றியுடன் தரப்படுத்தலில் இலங்கை அணி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளமை விசேட அம்சமாகும்.

