15 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவியுயர்வு



பொலிஸ் விசேட அதிரடிப்படையில் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக கடமையாற்றிய 15 பேர் உதவி பொலிஸ் அதிகாரிகளாக பதவியுயர்வு பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பதவியுயர்வு எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
சேவைக் காலம் மற்றும் திறமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது