
(தெரண)
இன்று சர்வதேச மகளிர் தினமாகும். இதனையொட்டி வடக்கு கிழக்கில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி என்னபவற்றில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்பு ஆடை அணந்திருந்ததுடன் கறுப்புக் கொடிகளையும் ஏந்தியிருந்தனர்.
பெண்களின் உரிமைகளை பாதுகாப்போம் நாட்டில் வலுவான பெண் சமுதாயத்தினை உருவாக்குவோம் என்னும் கருப்பொருளில் இன்று யாழ் பல்கலைகழக பரமேஸ்வர சந்தியின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு சூர்யா பெண்கள் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கண்டன ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மகாத்மா காந்தி பூங்காவில் நடைபெற்றது.
சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிரான வன்முறைகள், பாலியல் கொடுமைகள் உட்பட பெண்கள் மீதான துஸ்பிரயோகங்களுக்கு எதிராக பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
