இலங்கையில் நிலவும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக இம்முறை மனித உரிமைகள் கூட்டத்தொடரில் ஒரு நிமிடம் கூட இலங்கைக்கு எதிராக ஒதுக்கப்பட வில்லையென உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று தெரிவித்தார்.
மாவனல்லையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
கடந்த 10 வருட காலமாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு கூடியவுடன் இலங்கையில் இடம்டபெற்றதாக கூறப்படும் கடத்தல், வெள்ளை வேன் கலாச்சாரம், ஊடகவியலாளர்கள் காணாமல் போதம், கொலை போன்றன தொடர்பில் கலந்துரையாடப்படும்.
கடந்த 10 வருட காலமாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வந்த கலந்துரையாடல், முக்கிய கட்சிகள் இரண்டும் ஒன்றிணைந்து செல்லும் பயணத்தில் ஐ.நா. கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாக இலங்கை தொடர்பில் எந்த கருத்தும் இடம்பெறவில்லையெனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

