100 மில்லியன் நட்டஈடு! சோமவன்சவும், வீரவன்சவும் சமரசம்



ஜே.வி.பி கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க, முன்னாள் பிரசார செயலரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த வழக்கு சமரசத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஜே.வி.பியில் இருந்து விமல் வீரவன்ச வெளியேறிய பின்னர் அவர் எழுதிய “நெத்த வெனுவட்ட அத்த” என்ற நூலுக்கு எதிராக அப்போதைய ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், வழக்கு விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் அரசியல் ரீதியாக ஒன்றுபட்டு செயற்படும் இருவரும் தற்போது சமரசத்துக்கு செல்வதாக நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.