புத்தாண்டு தினத்தில் பல பாகங்களில் மின் துண்டிப்பு



புத்தாண்டு தினமான இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுக் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 2 மணி நேர மின்வெட்டு இடம்பெற்றதாக பொலன்னறுவை, பகமூன பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, அடிக்கடி மின்சாரம் கூடிக் குறைந்துள்ளதாகவும் அம்மக்கள் விசனம்தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பொலன்னறுவையிலும் நாட்டின் பல பாகங்களிலும் நீர்வழங்கள் நடவடிக்கைகளும் தடைப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
புத்தாண்டு தினத்தன்று இவ்வாறு மின்சாரமும், குடிநீரும் தடைப்பட்டதனால் குறித்த பிரதேச மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாரிய இடைஞ்சல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.