மதுபோதையில் வாகனம் செலுத்திய 688 சாரதிகளை இதுவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இன்று (13) காலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் மாத்திரம் மது போதையில் வாகனம் செலுத்திய 215 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், மோட்டார் சைக்கிள் சாரதிகள் 119 பேரும், முச்சக்கரவண்டி சாரதிகள் 66 பேரும் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவர்களில் தனியார் பஸ் சாரதி ஒருவரும், அரச பஸ் சாரதி ஒருவரும் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

