சுமாத்ரா கடற் பரப்பில் இலங்கை உட்பட 37 நாடுகளின் கடற்படை பயிற்சி முகாம்



இலங்கை கடற்படையின் “சமுத்ர” கப்பல் பயிற்சியொன்றுக்காக இந்தியாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆழ்கடல் பிரதேச கண்காணிப்புக்காக இலங்கை கடற்படையிடமுள்ள முக்கிய இக்கப்பலில் கடற்படை அதிகாரிகள் 186 பேரும் பயணித்துள்ளனர்.
இலங்கை கடற்படை உட்பட 37 நாடுகளின் கடற்படை அமைப்புக்கள் கலந்துகொள்ளும் கொமாண்டோ பயிற்சி முகாமொன்று நேற்று ஆரம்பமாகியது. இப்பயிற்சி எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் மேற்கு சுமாத்ரா கடற்பரப்பில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.