தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச லெப்டினன் கேர்ணல் பிரபோத சிறிவர்தன மற்றும் லெப்டினன் கேர்ணல் ஷம்மி குமாரரத்ன ஆகியோரின் வீடுகளுக்குச் சென்று அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சுக துக்கங்களை கேட்டறிந்துள்ளார்.
புலனாய்வுத் துறை அதிகாரிகளான பிரபோத சிறிவர்தன, சம்பி குமாரரத்ன உட்பட 9 இராணுவத்தினர், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தற்போதைய அரசாங்கத்தினால் கடந்த 7 மாத காலமாக வெலிகட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

